வெப்படை, புதுச்சத்திரத்தில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம்  வெப்படை புதுச்சத்திரம் ஆகிய இடங்களில் பஞ்சாலை தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாள் ஒன்றுக்கு ரூ 421 ரூபாய் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் மாதம் ரூ 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்க வேண்டும்.குறைந்தபட்ச மாதாந்திர கூலியாக ரூ 18 ஆயிரம் வழங்க வேண்டும்.பணியிலிருந்து ஓய்வு பெறும் காலத்தில் சம்பளத்தில் இருந்து பாதி அல்லது குறைந்தபட்சமாக ரூ 9 ஆயிரம் வழங்க வேண்டும்.பஞ்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ .பிஎப் திட்டங்களை   தொழிலாளர்களுக்கு அமுல்படுத்த வேண்டும்.ஒப்பந்தத் தொழிலாளராக பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஜெய்ஹிந்த் ஸ்பின்னிங் மில் ஆலை வாயில் முன்பு கிளை தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் .வேலுசாமி பங்கேற்று பேசினார்.

இதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெப்படை  பேருந்து நிறுத்தம் அருகில் பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட உதவித் தலைவர் கே பாலுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் சிஐடியு மாநில உதவி தலைவர் எஸ். சுப்பிரமணி,சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம். அசோகன்
பஞ்சாலைத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தனபால்
மாவட்ட துணை செயலாளர் பி.சண்முகம் மாவட்ட துணைத்தலைவர் .ராயப்பன் மாவட்ட பொருளாளர் பி.வைரமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!