மோடமங்கலம் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பாஜக ஆர்பாட்டம்.

திருச்செங்கோடு ஒன்றிய பாஜக சார்பில் மோடமங்கலம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டதிற்கு திருச்செங்கோடு ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாதார பிரிவு துணை தலைவர் அப்புசாமி வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார், ஆர்பாட்டத்தில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏழுமலை, ஈரோடு பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் பழனிச்சாமி, நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் தாமரைக்கண்ணன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர், ஆர்பாட்டத்தில் மோடமங்கலம் பகுதியை சார்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர், ஆர்பாட்டத்தில் அரசு மதுபான கடையை அகற்றிட கோரி மதுபாட்டில்களுக்கு பாடை கட்டி ஆர்பாட்டம் நடைபெற்றது, ஒன்றிய செயலாளர் மணீஸ் நன்றி கூறினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!