திருச்செங்கோட்டில் திருவள்ளுவர் விழா.

திருச்செங்கோடு சன்மார்க்க சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் விழா நடந்தது. விழாவிற்கு சன்மார்க்க சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொருளாளர் தொழிலதிபர் ராஜேஸ்வரன் வரவேற்றார். விழாவில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவையின் தலைவர் திருநாவுக்கரசு வள்ளுவத்தில் அரசியல் கோட்பாடுகள் என்னும் தலைப்பில்,  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தன்னுடைய ஒவ்வொரு உரையிலும் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டுவார் தன்னை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தியது வள்ளுவரின் திருக்குறள் தான் என்று கூறியுள்ளார். கம்பனில் இருந்து கண்ணதாசன் வரை எல்லாக் கவிஞர்களும் தங்கள் கவிதைகளில் திருக்குறளின் கருத்துக்களை பயன்படுத்தியுள்ளது எக்காலத்திற்கும் பொருந்தும் வல்லமை கொண்டது திருக்குறள் என்பதற்கு சான்றாகும்.என்று பேசினார்.

 திருச்சி தனலட்சுமி கல்லூரி பேராசிரியை விஜயசுந்தரி திருவள்ளுவர் பிரபஞ்சத்திற்கு அளித்த கொடை என்னும் தலைப்பில் தனது உரையில்,  அறம் என்பது வேறு சட்டம் என்பது வேறு அறம் என்பது மாறாதது சட்டம் என்பது மாறிக்கொண்டே இருப்பது பாரத நாட்டின் அறம் சார்ந்த கருத்துக்கள் உலகிற்கே வழி காட்டிக் கொண்டிருக்கின்றன. திருவள்ளுவர் உலகிற்கு அளித்த மிகப்பெரிய கொடை திருக்குறள் இது பாரத தேசத்திற்கு மிகப்பெரிய பெருமையாகும்.இவ்வாறு அவர் பேசினார் சன்மார்க்க சங்கத்தின் துணைத் தலைவர் பொன்னம்பலம் விழாவில் நன்றியுரை கூறினார் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!