மோளிபள்ளியில் குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

திருச்செங்கோடு  தாலுகா, எலச்சிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட மோளிப்பள்ளி  அருந்ததியர்  தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் விநியோகம் சீராக செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மூன்று நாளைக்கு ஒருமுறை அரை மணி நேரம் மட்டும் குடிநீர் வருவதால்  பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகவும், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த  வேண்டிய சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே மோளிப்பள்ளி பகுதிக்கு காவிரி குடிநீர் தினசரி வழங்க வேண்டும் எனவும், குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும் எனக் கோரியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர்  ஜனார்த்தனன் மற்றும் ஊர்பொதுமக்கள் எலச்சிபாளையம் பிடிஓ ரமேஷ்சிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.மனுவைப் பெற்றுக் கொண்ட பிடிஓ ரமேஷ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!