அரசு பேருந்தில் மது கடத்தல் 5 பெண்கள் கைது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு,  உத்தரவின்பேரில் நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசார் அடங்கிய தனிப்படையினர் 22.10.2018-ம் தேதி மோகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளையப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மதுவிலக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மணி (50), கலைவாணி தெரு, எடப்பாடி ரோடு, குமாரபாளையம் மற்றும் சாந்தி (49), ராஜம் தியேட்டர் அருகில், குமாரபாளையம் ஆகியோர் திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் பேருந்தில் 40 பாண்டிச்சேரி பிராந்தி பாட்டில்களை கடத்திச் சென்றவர்களையும், இன்று 23.10.2018-ம் தேதி காலை  இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டகலுர் கேட் பேருந்து நிறுத்தத்தில் மதுவிலக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தெய்வானை (60), காவேரி நகர், எடப்பாடி ரோடு, குமாரபாளையம்,  ஈஸ்வரி (58),  பிராந்தர்காடு, குமாரபாளையம் மற்றும் மல்லிகா (எ) பழனியம்மாள்,டீச்சர்ஸ் காலனி, வட்டமலை, குமாரபாளையம் ஆகியோர் ஆத்தூரிலிருந்து ஈரோடு செல்லும் அரசு பேருந்திலும், சுமார் அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 163 பாண்டிச்சேரி மதுபான பட்டில்களை (மொத்தம் 203 பாட்டில்கள் – 133 லிட்டர்) சட்டவிரோதமாக கடத்திவந்து குமாரபாளையம் பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கண்ட எதிரிகளை கைது செய்து பாட்டில்களை கைப்பற்றி நாமக்கல் மதுவிலக்குப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை கடத்தி வந்த பெண்களை கைது செய்து பாட்டில்களை கைப்பற்றிய மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான தனிப்படையினரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பாராட்டினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!