தமிழ்வழிக் கல்வியை பாதுகாத்திடக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செ.மலர்கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கு.பூபதி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் இரா. நடேசன் தமிழக ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் இரா.வேல்முருகன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலதுணை செயலாளர் வே. அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரைஆற்றினா.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாநில சட்ட செயலாளர் பி முத்துசாமி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்கம் மாவட்ட தலைவர் கொ.நல்லதம்பி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழ் வழிக்கல்வியை பாதுகாத்திட வேண்டும், ஆறாவது ஏழாவது ஊதியக்குழு முரண்பாடுகளை உடனே சரிசெய்ய வேண்டும், அரசாணை 101 திருத்தம் செய்து முன்பிருந்தது போல தொடக்கக்கல்வி பள்ளிக்கல்வி மேல்முறையீட்டு அலுவலர் நியமன அலுவலர் களாக இயக்குனர்கள் இணை இயக்குனர்களே தொடரவேண்டும்,கல்வித்துறையில் நீதிமன்ற வழக்குகளை தவிர்த்திட ஏற்கனவே நடைமுறையில் இருந்த மூன்றடுக்கு கூட்டத்தை மூன்று எங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!