நாமக்கல்லில் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கங்கத்தின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலை முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஜி ராஜகோபால் தலைமை வகித்தார். குறைந்தபட்ச ஊதியம் ரூ 18 ஆயிரமாக வழங்க வேண்டும், ஓய்வூதியம் மருத்துவ காப்பீடு பணிவரன் முறை வழங்க வேண்டும்,அனைத்து கூட்டுறவு பணியாளர்களுக்கு ஒரே மாதிரி உயர்ந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தம் காலாவதி ஆகிய நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி வழங்க வேண்டும், பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்,கைத்தறி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தியும் மருத்துவ காப்பீடு செய்து தரவேண்டும், விற்பனை சங்க பணியாளர்களுக்கு ஜனவரி 2015 ஆம் தேதி முதல் புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகையை உடனடியாக வழங்கியும் பதவி உயர்வு வழங்க வேண்டும், விற்பனையாளர்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்,உணவு பொருட்கள் வினியோக திட்டத்தின் கீழ் தொடர்ந்து வழங்க வேண்டும்,பொது வினியோகத்தை துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.ரங்கசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார் மாவட்ட துணைசெயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!