நாமக்கல்லில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்.

தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் நிர்ணயம் செய்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. நாமக்கல் பூங்கா சாலை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்ஜி.ராஜகோபால் தலைமை வகித்தார்.

போராட்டத்தை  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கு.ராஜேந்திரபிரசாத் துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன் வாழ்த்திப் பேசினார்.சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்  கே.கந்தசாமி, சங்க மாவட்ட செயலாளர் கே.கண்ணன். மாவட்ட பொருளாளர் முருகேசன். மாவட்ட உதவிச் செயலாளர் கு.சிவராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

போராட்டத்தில் தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் ஒரே மாதிரியான சம்பளம் நிர்ணயம் செய்து உத்தரவிட வேண்டும்,ஏழாவது ஊதியக்குழு உயர்வில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஆபரேட்டர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு புதிய சம்பளம் நிர்ணயம் செய்து வழங்கியதில் உள்ள முரண்பாடுகள் ரூபாய் வித்தியாசங்களை சரி செய்து வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசு ஆணைப்படி பணிக்கொடை ரூ 50 ஆயிரமும் ஓய்வுபெறும்போது ஓய்வூதியம் ரூ2 ஆயிரமும் வழங்க வேண்டும்,கிராமப்புற பஞ்சாயத்துகளின் பணிபுரியும் அனைவருக்கும் அடையாள அட்டை மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  

இறுதியாக சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!