நாமக்கல், குமாரபாளையம் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரி தொழில்வரி குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியக் குழுவின் சார்பில் படைவீடு பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சிப் பகுதியில் உயர்த்தப்பட்ட சொத்துவரி தொழில்வரி குடிநீர் கட்டண உயர்வு உள்ளிட்ட வரி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடவேண்டும், சீரான குடிநீர் வழங்கிட வேண்டும், படைவீடு பேரூராட்சி மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், சாலை வசதி சாக்கடை வசதி தெருவிளக்கு வசதி கழிப்பிட வசதி அமைத்துத் தரவேண்டும், விதவை மாற்றுத்திறனாளிகள் வயதானவர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது. இதேபோல் குமாரபாளையம் நகராட்சி,நாமக்கல் நகராட்சி, ஆலாம்பாளையம் பேரூராட்சிகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!