நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு  அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம்  சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம்  வழங்க வேண்டும், ஊதியம் ரூ. 15,700  ஆக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் பணிக்கொடை வழங்கு வேண்டும், 2015ஆம் ஆண்டு பிடித்தம் செய்த ஜிபிஎப் பணத்தை ஓய்வுபெற்ற உடனே வழங்கிட வேண்டும், உதவியாளர்கள் பதவி உயர்வு பெறும் காலம் பத்தாண்டு என்பதை 5 ஆண்டாக மாற்றிட வேண்டும், சம வேலை சம ஊதியம்  என்ற அடிப்படையில் குறுமை பணியாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக நாமக்கல் மோகனூர் சாலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் பேரணி புறப்பட்டு பூங்கா சாலை வழியாக வந்தடைந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணகி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல் ஜெயக்கொடி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கு.ராஜேந்திரபிரசாத் மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன்,சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்களை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!