மல்லசமுத்திரத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்.

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நடப்பு சம்பா(நெல் II) பருவத்தில்  மல்லசமுத்திரம் கீழ்முகம் மற்றும் மாமுண்டி ஆகிய கிராமங்களில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது.

இதற்கான விழிப்புணர்வு கூட்டம் மாமுண்டி கிராமத்தில் நடந்தது.மல்லசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர்சண்முகம் தலைமையில் நடைபெற்றது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீட்டு தொகை ரூ.29 ஆயிரம் எனவும் இக்காப்பீட்டில் இணைய விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை ஏக்கருக்கு ரூ.580 என்றும். இத்திட்டத்தில் விவசாயிகள் இணைய கடைசி நாள் 30.11.2018 எனவும், இந்த பிரிமிய தொகையினை விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் , தேசிய மயமாக்கபட்ட வங்கிகள் மற்றும் மத்திய அரசின் டிஜிட்டல் சேவா பொது சேவை மையங்கள் ஆகிய இடங்களில் பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான முன்மொழிவு படிவம் , விண்ணப்ப படிவம் , பயிர் சாகுபடி அடங்கல் ,ஆதார் அட்டை நகல் , வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகலுடன் நேரில் சென்று உரிய பிரிமியத் தொகையை செலுத்தி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம் எனவும். அதற்குரிய ரசீதினை சம்பந்தப்பட்ட பொது சேவை மையங்களில் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

 

இந்த முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் அலாவுதீன் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!