திருச்செங்கோடு, லாரிபட்டறை தொழிலாளி கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே லாரி பட்டறை தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பருத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கலையரசன் இவர் திருச்செங்கோடு லாரி பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார் நேற்று நள்ளிரவில் பருத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த தங்கவேல் அவரது மகன் பெருமாள் ஆகிய இருவருக்கும் குடும்பத் தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டது இவர்களது உறவினரான கலையரசன் வீரமணி மனோகரன் ஆகியோர் தந்தை மகனுக்கு இடையேயான தகறாரை விலக்கிவிடச் சென்றனர் இதற்கிடையே சண்டையை விலக்கச் சென்ற இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த வீரமணி மற்றும் மனோகரன் ஆகியோர் கலையரசனை சரமாரியாக கத்தியால் குத்தினர் இதில் படுகாயமடைந்த கலையரசன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் கலையரசனை கத்தியால் குத்தி கொலை செய்த வீரமணி மற்றும் உடனே கைது செய்துள்ளனர்.

 

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!