ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.35 லட்சம் மோசடி, போலி வக்கீல் கைது.

ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனரிடம் உயர் நீதிமன்ற வக்கீல் என கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், ஆண்டகளுர் கேட்,கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சதாசிவம் (72), ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார்.  ராசிபுரம் வட்டம், புதுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் 2014 ம் ஆண்டு சோலார் லைட் தொழிலுக்கு ரூ.55 லட்சம் கடனாக பெற்றதாகவும், கடனை திருப்ப தராமல் ஏமாற்றி வந்ததால் கடன் பெறும்போது கொடுத்த பாண்டுகள் காசோலைகளை வைத்து வழக்கு தொடர முயற்சித்தபோது இராசிபுரம், விநகரில் வசிக்கும் வின்ஸ்டன் சர்ச்சில், என்பவர் தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் என்றும் பாஸ்கரன் மீது வழக்கு தொடர்ந்து கொடுத்த கடனை வட்டியுடன் சேர்த்து வசூல் செய்து தருவதாக கூறி சதாசிவத்திடம்  செய்தித்தாள் அறிவிப்பிற்கு என்று ரூ.1,27,000/- பணமாக பெற்றுக்கொண்டு பின்னர் பல்வேறு தவணைகளில் நேரடியாகவும் வங்கி பரிவர்த்தனை மூலமாகவும் ரூபாய் 35,00,000/- வரை சதாசிவத்திடம் பணத்தை வாங்கிக்கொண்டு, 31.08.2015 ம் தேதி இசைவு தீர்ப்பாயத்தில் பாஸ்கர் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறி அவர் கையொப்பம் மற்றும் சீல் வைக்கப்பட்ட பத்திரங்களை சதாசிவத்திடம் கொடுத்து விரைவில் உங்களுக்கு பணம் கிடைக்கும் என கூறி நீண்ட நாட்களாக ஏமாற்றியவரை விசாரித்தபோது அவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இல்லை என்றும், அவர் மோசடி பேர்வழி என்றும் இதுபோல் பலரிடம் ஏற்கனவே வேலை வாங்கி தருவதாகவும் வழக்கு நடத்துவதாகவும் கூறி மோசடி செய்துள்ளார். மேலும் அந்நபரை பற்றி பார் கவுன்சிலில் விசாரித்ததில் சர்ச்சில் பெயர் பார் கவுன்சிலில் பதிவு செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. இசைவு தீர்ப்பாளர் மற்றும் வழக்கறிஞர் என்று சொல்லி போலியான ஆவணங்களை புனைந்து ஏமாற்றி ரூ.35 இலட்சம் பணத்தை மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்த வின்ஸ்டன் சர்ச்சிலை இராசிபுரம் போலிஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!