ரூ.40 லட்சம் எரிசாராயம் கடத்தல்,இருவர் கைது

ரூ.40 இலட்சம் மதிப்புள்ள எரிசாராயம் கடத்தி வந்த குற்றவாளிகள் வாகனத்துடன் கைது.

ஹரியானாவில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்திச் செல்லவிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு ஏடிஎஸ்பிசெந்தில் தலைமையில் திருச்சி, மத்திய குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், நாமக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இன்று அதிகாலை சேலம் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது  அந்த வழியாக வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த லாரியை சோதனை செய்தபோது, வாகனத்தில் சுமார் 27 இலட்சம் மதிப்புள்ள 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 500-க்கும் மேற்பட்ட கேன்களில் எரிசாராயம் (சுமார் 20,000 லிட்டர்) மறைத்து சட்டவிரோதமாக கடத்திவந்துள்ளது தெரியவந்தது, மேற்கண்ட வாகனத்தை ஓட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (49), ஆந்திராவைச் சேர்ந்த சிவய்யா (30), ஆகியோரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் ஹரியானா மாநிலத்திலிருந்து பாலாஜி கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் லிக்யூட் குளோரின் என்ற பெயரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு எரிசாராயம் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஸ்பிரிட் கேன்களை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட லாரி மற்றும் எரிசாராயத்தின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். இதுசம்மந்தமாக நாமக்கல் மதுவிலக்குப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சம்மந்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!