மக்கள்பாதை சார்பில் அரசு பள்ளியில் பனை விதை நடவு.

மக்கள் பாதை அமைப்பு சார்பில் உலகப்பம்பாளையம் அரசு பள்ளியில் பனைவிதைகளை விதைக்கும் நிகழ்வு நடந்தது. ஐ ஏ எஸ் அதிகாரி உ.சகாயம் வழிகாட்டடுதலில் இயங்கும் மக்கள்பாதை அமைப்பின்  தாய்மண் திட்டத்தின் சார்பில்  திருச்செங்கோடு அடுத்த உலகப்பம்பாளையம் அரசு பள்ளியில் பனைவிதைகளை விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைைம வகித்தார்.
துணை தலைமை ஆசிரியை அரங்கநாயகி,  ஆசிரியர்கள் குணசேகரன், முருகானந்தம், ரவீந்திரன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
மக்கள் பாதையின் திருச்செங்கோடு ஒன்றிய பொறுப்பாளர் கண்ணன் ,  திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வினோத்குமார், சோலைராஜா, கௌரிஷங்கர், ராஜ்குமார் ஆகியோர் பனைவிதைகளை நடவு செய்தனர். இந்நிகழ்வில் உலகப்பம்பாளையம் பள்ளியில்  சுமார் 500 பனைவிதைகள் நடவு  செய்யப்பட்டது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!