மாநில காவல்துறை விளையாட்டுப் போட்டி,நாமக்கல் மாவட்ட போலீசார் சாதனை – எஸ்பி பாராட்டு.

தமிழ்நாடு காவல் துறை சார்பில் 58-வது மண்டலங்களுக்குகிடையேயான மாநில அளவிலான காவல்துறையினருக்கான தடகள போட்டி திருவள்ளுவர் மாவட்டம், வண்டலூர், மேலகோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழக அரங்கில் இருாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக அளவில் மல்யுத்தப் போட்டியில் இரண்டாவதாகவும், ஜூடோவில் இரண்டாவதாகவும், கராத்தேவில் இரண்டாவதாகவும் மேற்கு மண்டல காவல் துறையினர் வெற்றி பெற்று சாதனைபுரிந்தனர்.மேலும் மேற்கு மண்டலம் சார்பாக பங்கேற்ற நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் அமுதா 75 கிலோ எடை பிரிவு ஜூடோ மற்றும் குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த  பெண் காவலர் அருள்மொழி 63 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கமும், ஜூடோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் மற்றும் டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்று சாதனைபுரிந்தார். ஜேடர்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் மகேஷ் 55 கிலோ எடைப்பிரிவுக்கான ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார்.  நாமக்கல் ஆயுப்படை பிரிவைச் சேர்ந்த காவலர் தினேஷ்குமார் 65 கிலோ எடைப்பிரிவுக்கான ஊசு (Wu-Shu) போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். நாமக்கல் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ராதாகிருஷ்ணன் 65 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்தப் பிரிவில் வெண்கல பதக்கம் மற்றும் டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார்.   நாமக்கல் ஆயுப்படை பிரிவைச் சேர்ந்த காவலர் ரவி 75 கிலோ எடைப்பிரிவு குழுவினருக்கான (Overall)  கராத்தே போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்.

மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட காவலர்கள் மாநில அளவில் மூன்றாம் இடமும், மண்டல அளவில் முதலிடத்திற்கான 3 கேடயங்களை பரிசாக பெற்றுள்ளனர். மேலும் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அகில இந்திய காவல்துறை சார்பில் 15.11.2018ம் தேதி முதல் 19.11.2018-ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஜூடோ போட்டிக்கு பெண் காவலர் அமுதாவும், ஊசு (Wu-Shu) போட்டிக்கு காவலர் தினேஷ்குமாரும் தேர்வு பெற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டியில் சாதனைபுரிந்த காவலர்களையும், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற காவலர்களையும் நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு பாராட்டினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!