ரெய்டு முடிவு, திருச்செங்கோடு சத்துமாவு நிறுவனத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேறினர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சத்துமாவு நிறுவனத்தில் கடந்த ஐந்து தினங்களாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருச்செங்கோடு தலைமை அலுவலகம் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள நிறுவனத்தின் பல்வேறு கிளைகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோதனைகள் நடந்தது. இன்று மாலை 7.30 மணியுடன் தங்களது சோதனைகளை முடித்துக் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள். நிறுவனத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகக் [...]

கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், நல்லூர் கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதி அறையில் மின் கசிவு ஏற்பட்டதால் அறையில் வைக்கப்பட்டிருந்த துப்புறவு மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தின் போது கடுமையான நெடியுடன் [...]

திருச்செங்கோடு சத்துமாவு கம்பெனியில் ஐந்தாவது நாளாக சோதனை. பலகோடி பணம், தங்கம் பறிமுதல் ?.

 (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-6949527066445154", enable_page_level_ads: true }); திருச்செங்கோடு சத்துமாவு கம்பெனியில் கடந்த ஐந்து நாட்களாக ஐடி அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல கோடி பணம், தங்க கட்டிகள் சொத்து [...]

திருச்செங்கோடு, சாயி கிருபா அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருச்செங்கோடு ஸ்ரீ சாயி கிருபா அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருச்செங்கோடு சிஎச்பி காலனி  ஸ்ரீ சாயி மந்திரில் நேற்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

திருச்செங்கோடு, ரூ.2.50 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டிடம்- அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-6949527066445154", enable_page_level_ads: true }); திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

எலச்சிபாளையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பயிற்சி

எலச்சிபாளையம் வட்டாரம் ஆன்றாபட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்  குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

ராசிபுரம் அரசு பிற்பட்டோர் நலத்துறை விடுதி மாணவியர்களுக்கு வாந்திபேதி- அரசு மருத்துவமனையில் அனுமதி.

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி மாணவியர்கள் 16 பேருக்கு வாந்திபேதி ஏற்பட்டதால் பாதிப்படைந்த மாணவிகளுக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வரப்படுகிறது. ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்துவரும் பிற்படுத்தப்பட்ட மாணவியர்களுக்கு அரசு சார்பில்  மாணவியர் விடுதி குருசாமிபாளையம் பகுதியில் தனியார் கட்டிடத்தில்  சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. விடுதி காப்பாளராக யசோதா இருந்து வருகிறார்.இந்த விடுதியில்  29 மாணவியர்கள் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த [...]

வெண்ணந்தூர் அருகே மினி மாரத்தான் போட்டி – 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்புவெண்ணந்தூர் அருகே மினி மாரத்தான் போட்டி – 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெண்ணந்தூர் அருகே மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்  வெண்ணந்தூர் அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. கிராமப்புறத்தில் மாணவர்களிடையே விளையாட்டு திறனை ஊக்கவிக்கும் பொருட்டும், மாணவர்களிடையே விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்  விதமாகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மினி மாரத்தான் போட்டி நடந்தது. ராசிபுரம் அருகே உள்ள பொன்பரப்பிப்பட்டி மாரியம்மன் [...]

கவர்ச்சி காட்டத் துடிக்கும் நந்திதா…!

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை நந்திதாவுக்கு பாவாடை தாவணி போடும் கேரக்டர்களே தேடி வருவதால் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார் அவர். தற்பொழுது வெங்கடேசன் இயக்கத்தில் நந்திதா நடித்து வரும் நளனும் நந்தினியும் படத்திலும் ஹோம்லி வேடம் தானாம்.இதனால் நொந்து இருக்கும் நந்திதா, சார் நான் ரொம்ப மாடர்ன் பொண்ணு அதுவும் பெங்களூர் பொண்ணு எனக்கு தகுந்த வேடம் கொடுங்க சார் கலக்கி காட்டுகிறேன் என புலம்பி வருகிறாராம்.கவர்ச்சி காட்ட துடிக்கும் நந்திதாவை தங்களின் படங்களில் [...]

இராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு.

இராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை மற்றும் கணிணி பயன்பாட்டுத்துறையின் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான “இம்பேக்ட் –  2013” என்ற விழா நடைபெற்றது,இவ்விழாவில் திரு. சந்திரசேகர் சென்னியப்பன், தலைவர், மனித வள மேம்பாட்டுத்துறை, இந்தியா அட்மல் கார்ப்பரேசன், சென்னை, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.துவக்க விழாவில் மேலாண்மை துறைத்தலைவர் எம்,ஜி. சரவணராஜ், வரவேற்றார்.முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் தாளாளர்  ஆர். கந்தசாமி தலைமை வகித்தார். முத்தாயம்மாள் எஜிகேசனல் ட்ரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேசன் செயலாளர் க. குணசேகரன் [...]
error: Content is protected !!