ரெய்டு முடிவு, திருச்செங்கோடு சத்துமாவு நிறுவனத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேறினர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சத்துமாவு நிறுவனத்தில் கடந்த ஐந்து தினங்களாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருச்செங்கோடு தலைமை அலுவலகம் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள நிறுவனத்தின் பல்வேறு கிளைகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோதனைகள் நடந்தது. இன்று மாலை 7.30 மணியுடன் தங்களது சோதனைகளை முடித்துக் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள். நிறுவனத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகக் [...]

கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், நல்லூர் கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதி அறையில் மின் கசிவு ஏற்பட்டதால் அறையில் வைக்கப்பட்டிருந்த துப்புறவு மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தின் போது கடுமையான நெடியுடன் [...]

திருச்செங்கோடு சத்துமாவு கம்பெனியில் ஐந்தாவது நாளாக சோதனை. பலகோடி பணம், தங்கம் பறிமுதல் ?.

 (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-6949527066445154", enable_page_level_ads: true }); திருச்செங்கோடு சத்துமாவு கம்பெனியில் கடந்த ஐந்து நாட்களாக ஐடி அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல கோடி பணம், தங்க கட்டிகள் சொத்து [...]

திருச்செங்கோடு, சாயி கிருபா அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருச்செங்கோடு ஸ்ரீ சாயி கிருபா அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருச்செங்கோடு சிஎச்பி காலனி  ஸ்ரீ சாயி மந்திரில் நேற்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

திருச்செங்கோடு, ரூ.2.50 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டிடம்- அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-6949527066445154", enable_page_level_ads: true }); திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

எலச்சிபாளையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பயிற்சி

எலச்சிபாளையம் வட்டாரம் ஆன்றாபட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்  குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

கவர்ச்சி காட்டத் துடிக்கும் நந்திதா…!

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை நந்திதாவுக்கு பாவாடை தாவணி போடும் கேரக்டர்களே தேடி வருவதால் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார் அவர். தற்பொழுது வெங்கடேசன் இயக்கத்தில் நந்திதா நடித்து வரும் நளனும் நந்தினியும் படத்திலும் ஹோம்லி வேடம் தானாம்.இதனால் நொந்து இருக்கும் நந்திதா, சார் நான் ரொம்ப மாடர்ன் பொண்ணு அதுவும் பெங்களூர் பொண்ணு எனக்கு தகுந்த வேடம் கொடுங்க சார் கலக்கி காட்டுகிறேன் என புலம்பி வருகிறாராம்.கவர்ச்சி காட்ட துடிக்கும் நந்திதாவை தங்களின் படங்களில் [...]

திருச்செங்கோடு அருகே பள்ளி ஆசிரியர் வீட்டில் 20 சவரன் தங்க நகை கொள்ளை.

திருச்செங்கோடு அருகே, பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருச்செங்கோட்டை அடுத்துள்ள கைலாசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 60). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சுந்தராம்பாள் (55). இவர்களுக்கு செந்தில்குமார் (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். செந்தில்குமார் ஆலாம்பாளையம் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை பொன்னுசாமி வழக்கம்போல் தறித்தொழிலுக்கு சென்று [...]

திருச்செங்கோடு வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு.

திருச்செங்கோடு வக்கீல் கொடுத்த புகாரின் பேரில்  வேலகவுண்டம்பட்டி போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருச்செங்கோடு வக்கீல்கள் காலவரையற்ற முறையில் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்செங்கோட்டை அடுத்துள்ள மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்  மாணிக்கவேல் வக்கீல்.இவருக்கும். இவரது பக்கத்து தோட்டத்துக்காரர்களுக்கும் பிரச்சனை எழுந்தது.இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்கீல் மாணிக்கவேல் வேலகவுண்டம்பட்டி போலீசாரிடம் புகார் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.இந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.  இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி போலீசாரை கண்டித்தும், வக்கீல் மாணிக்கவேல் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை [...]

திருச்செங்கோடு,நீதிமன்ற வளாகத்தில் கைதிக்கு காலணியில் மறைத்து கஞ்சா விநியோகம் – வாலிபர் கைது. இருவர் தலைமறைவு.

திருச்செங்கோடு நீதிமன்ற வளாகத்தில் சேலம் மத்திய சிறையிலிருந்து விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிக்கு காலணியில் மறைத்து கஞ்சா விநியோகித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சர்க்கரை(எ)சர்க்கரை கார்த்தி இவர் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று விசாரணைக்காக திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு சர்க்கரை கார்த்தியை ஆயுதப்படை போலீசார் அழைத்து வந்தனர்.அவரை பார்க்க குமாரபாளையம் காவிரி நகர் [...]
error: Content is protected !!